இலங்கை அரசாங்கம் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க (USAID) உதவி நிறுவனத்தின் உதவியுடன் 1979 இல் விவசாய சந்தைப்படுத்தல் தகவல் முறைமையொன்றை (AMIS) சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி கூறு (MRU) எனும் வகையில் கமத்தொழில் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகத்தில் அறிமுகஞ் செய்தது. இந்த சந்தைப்படுத்தல் அராய்ச்சிக் கூறு 1980 ஆம் தசாப்தத்தில் சந்தைப்படுத்தல் மற்றும் உணவுக் கொள்கைப் பிரிவு என மீளவும் பெயரிடப்பட்டதோடு, 2000 இல் இது சந்தைப்படுத்தல், உணவுக் கொள்கை மற்றும் விவசாயத் தொழில் முயற்சிப் பிரிவாக மாறியது.

சந்தைப்படுத்தல், உணவுத் கொள்கை மற்றும் விவசாயத் தொழில் முயற்சிப் பிரிவின் பணிகளில் உணவுப் பொருட்களின் விலைகளைத் திரட்டுதல். அவற்றைப் பகுப்பாய்வு செய்தல், அறிக்கை தயாரித்தல் மற்றும் அவற்றைக் கொள்கை வகுப்போர், அரசாங்க அலுவலர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், கல்விமான்கள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகித்தல் என்பவை உள்ளடங்குகின்றன. சந்தை தகவல்களை சேகரித்தலுக்கான பொறியமைப்பு 1996 இல் உணவு விவசாய தாபனத்தினதும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினதும் நிதி மற்றும் தொழில்நுணுக்க உதவிகள் ஊடாகவே மேலும் விரிவாக்கப்பட்டது. இப்பிரிவு விவசாய சந்தை ஆராய்ச்சிக் கற்கை மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றது. இவ்வாறு நடத்துகின்ற பிரதான ஆராய்ச்சித் துறைகளில் சந்தைப்படுத்தல் தகவல்கள், விலை நிர்ணயிக்கும் கொள்கை. செயல்முறைக்கு உட்படத்துதலும் களஞ்சியப்படுத்துதலும், சர்வதேச சந்தைப்படுத்தல். போசாக்கு, உணவுக் கொள்கை மற்றும் விவசாயத் தொழில் முயற்சி போன்ற விடயங்கள் அடங்குகின்றன.

இப்பிரிவு இரண்டு செய்தி மடல்களைத் தொடர்ச்சியாக ஆங்கிலம். சிங்களம் ஆகிய மொழிகளில் வெளியிட்டு வருகின்றது. வாராந்த உணவுப் பொருள் செய்தி மஞ்சரி மற்றும் மாதாந்த உணவுத் தகவல் மஞ்சரி என்பவையே அவை. உணவுப் பொருள் செய்தி மஞ்சரி பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகின்றது. உணவுப் பொருட்களின் நிலைமைகள் பற்றிய பகுப்பாய்வும் பிரதான விலைக் குறிகாட்டிகள் சிலவும் இதில் அடங்குகின்றன. 'உணவுத் தகவல் மஞ்சரி' விலைமட்டங்கள், உற்பத்தி, பயிர் நிலைமை மற்றும் சம்பந்தப்பட்ட மாதத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய உணவு வகைகள் பற்றிய தகவல்களைக் கொண்டதாக மாதந்தோறும் வெளியாகின்றது. இந்நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி மற்றும் சந்தை நிலைமைகளுடன் சம்பந்தப்பட்ட விலைமட்டங்களும் இந்த மஞ்சரி மூலமாக வழங்கப்படுகின்றது. அத்துடன் இறக்குமதி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்களின் அளவு, அவற்றின் பெறுமதி. விலைகள் மற்றும் எந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன போன்ற தகவல்களும் அதில் வழங்கப்படுகினறன.

இலங்கை சனாதிபதியவர்களின் அலுவலகத்தில் வர்த்தகப் பண்டங்களின் உற்பத்தி மற்றம் சந்தைப்படத்தல் தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்ற உணவுப் பாதுகாப்பு, வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சு உபகுழுவுக்கு தேவையான பல்வேறு தகவல்கள் வாரந்தோறும் வெளியாகின்ற உணவுப் பொருள் மஞ்சரி மூலமாகவும் மாதாந்தம் வெளியாகின்ற உணவுத் தகவல் மஞ்சரியில் இருந்தும் வழங்கப்படுகின்றன.

 

harti bann

 

webp